இதுதான் வாலிப வயசா...நள்ளிரவில் அரசு பேருந்தைத் திருடி சென்ற இளைஞர்... காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


இலங்கை பிலியந்தலை பேருந்து டிப்போவில் நேற்று இரவு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றிருந்தனர். உணவு வாங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தி இருந்த பேருந்து காணாமல் போனதை உணர்ந்த ஓட்டுநர் பிலியந்தலை போலீசில் புகார் அளித்தார். 

இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கெஸ்பேவ - பிலியந்தலை சந்தைக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்து பேருந்து செல்வதை கண்ட அதிகாரிகள் பேருந்தை தடுத்து நிறுத்தியதால், தப்பியோட முயன்ற அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

மேலும், நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்த வாலிபர், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்துகள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் டிப்போவில் நிறுத்திஇருந்த பேருந்தை எடுத்துச்சென்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth stole the government bus in middle night


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->