கேரளாவில் அதிர்ச்சி.! இறப்பதற்கு முன்பே இரங்கல் செய்தி வெளியிட்ட வாலிபர்.! - Seithipunal
Seithipunal


வேலைகிடைக்காததால் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரங்கல் செய்தியை பதிவு செய்துவிட்டு வாலிபர் தேர்க்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில், எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப். இவர் தனது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த போலீஸார், அஜ்மல் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக போலீசார், அஜ்மலின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறப்பதற்கு முன்பாக சுயமாக இரங்கல் செய்தியை அஜ்மல் ஷெரிப் வெளியிட்டிருந்தார். அதாவது, ரெஸ்ட் இன் பீஸ் அஜ்மல் ஷெரிப், 1995-2023 என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு முன்னதாக, துபாய் சென்றிருந்த அஜ்மல், வேலை கிடைக்காததால் மீண்டும் தாய்நாடு திரும்பினார். இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth sucide after condoles in instagram page in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->