ஆட்டுப்பாலைக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்ப்போம்.!
benefits of goat milk
நாம் அனைவரும் பசும்பாலை தான் தயிர், மோர், டீ, காபி உள்ளிட்டவை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், ஆட்டுப்பாலைக் குடிப்பது குறித்து இங்கு காண்போம். பசு மற்றும் எருமை பாலில் உள்ள கொழுப்பு வகைகளை ஒப்பீடு செய்யும்போது ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு குறைந்த அளவே இருக்கிறது. இதனால், ஆட்டுப்பால் எளிதாக ஜீரணம் செய்ய முடிகிறது. இதனை தயிராகவும் பயன்படுத்தலாம்.
இந்தத் தயிர் பசும்பாலின் தயிரை விட மிகவும் மென்மையானது என்று சொல்லப்படுகிறது. பால் குடிப்பதினால் ஏற்படும் அலர்ஜிகளை இந்த ஆட்டுப்பால் தடுக்கிறது. இதில், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி அலர்ஜி மற்றும் ஒவ்வாமை உள்ளிட்டவைகளை எதிர்க்கிறது.
ஒரு வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு முதலில் மாட்டுப்பால் கொடுப்பதை விட கொழுப்பு தன்மை குறைவாக இருக்கும் ஆட்டு பாலை கொடுப்பது வயிற்றுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன.
வைட்டமின்கள், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ள ஆட்டுப்பாலை குடிப்பதன் மூலம் எலும்புகள் பலப்படுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு பெரிதும் உதவி புரிகிறது. அதனால், இந்த ஆட்டுப்பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக குடித்து வரலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.