மன சோர்வை நீக்கும் கசகசா.!
benefits of kasakasa
சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று கசகசா. இதில், பல்வேறு நோய்களை தீர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உணவில் கலந்து சாப்பிடுவதால் என்ன நன்மை உண்டாகும் என்று இங்கு பார்க்கலாம்.
காய்ச்சல், அதிகமாக தாகம் எடுப்பது, உடலில் அரிப்பு ஏற்படுவது, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூட்டு வலி, உடல் வலி, உடலில் வீக்கம், அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக கசகசா பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மனம் சம்பந்தப்பட்ட நோய்களான மனச்சோர்வு, மனக்குழப்பம், பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. நரம்பு பிரச்சனைகளான நரம்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி உள்ளிட்டவற்றையும் தீர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது.
இரவில் தூங்குவதற்கு முன்பாக கசகசாவை பாலில் ஊறவைத்து குடித்து வந்தால் சில நிமிடங்களிலேயே தூங்கி விடலாம். இப்படி பல நோய்களுக்கு மருந்தாக இந்தக் கசகசா பயன்படுத்தப்பட்டு வருகிறது.