குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிஸ்கெட் மில்க் ஷேக்.! செய்வது எப்படி.?
Chocolate biscuit milk shake
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிஸ்கெட் மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
குளிர்ச்சியான பால் - 2 கப்
சாக்லேட் கிரீம் பிஸ்கட் - 1 கப்
கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1 கப்
சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
பிறகு இதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்தால் டேஸ்டியான சாக்லெட் பிஸ்கெட் மில்க் ஷேக் ரெடி.
English Summary
Chocolate biscuit milk shake