பொடுகு ஏன் வருகிறது?... பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்? - Seithipunal
Seithipunal


கண்ணுக்கு மை அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது. எவ்வளவுதான் முடியை பத்திரமாக பாதுகாத்தாலும் பொடுகு வந்தால் எல்லாம் பொசுக்கென்று போய்விடும்.

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொடுகு தொல்லை என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான, பொடுகை இயற்கை வழியில் எப்படி நீக்குவது என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வறட்சியான சருமத்தினால் வரும்.

2. அவசரமாக தலைக்கு குளிப்பது, நன்றாக தலையை துவட்டாமல் இருப்பதால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.

4. தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்.

5. அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு வரலாம். 

6. மனஅழுத்தம் மற்றும் கவலையாலும் பொடுகு வரலாம்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

4. வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராது.

6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.

7. அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

8. வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dandruff problem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->