தினமும் வீட்டிலேயே ஈசியாக செய்யும் பன்னீர் ரெசிபி.. இன்றே செய்து பாருங்கள்..!
easiest panner recipe
ஒரே மாதிரி உணவை சாப்பிடாமல் விதவிதமாக சாப்பிட ஆசைபடுவர்கள் தவறாமல் பன்னீரை எடுத்து கொள்ளலாம். பன்னீரில், கபாப், டிக்கா, பக்கோடா, பாப்கார்ன் என பல உணவுகள் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று கார்லிக் பன்னீர் எப்படி செய்வது என பார்போம்.
தேவையாவவை:
பனீர் - 220 - 240 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - ½ காப்சியம்
பூண்டு - 6 பல்
வினிகர் - 1 டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் - 4 -5
எண்ணெய் -1- 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
சீரகம் -½ டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -½ டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நறுக்கப்பட்ட கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் பூண்டு பல், காஷ்மீரி மிளகாய், உப்பு, சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து ஒரு ஜாரில் கலக்கவும் அரைத்து கொள்ளவும். அடுப்பை கடாயை எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சிரகம் சேர்க்கவும்.
இதனுடன் காப்சியம் மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இது மொறுமொறுப்பு கொடுக்கும்.இப்போது அரைத்த வைத்திருந்த கலவையை சேர்த்து, லேசான சூட்டில் வதக்கி வேக விடவும்.
இப்போது நன்றாக வெந்தவுடன் கலவை இறுகி வரும். பச்சை வாசம் நீங்கி கம, கமவென மனம் கிளம்பும். எண்ணெய் பிரிந்து வரும். பூண்டு அதிகமாக வதங்கிவிட கூடாது. மற்றோரு கடாயில் பன்னீரை வதக்கி கலவையுடன் சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கி கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான கார்லிக் பன்னீர் தயார்,