மாலைநேர சூப்பர் ஸ்னாக்ஸ் முட்டை சமோசா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்த மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் முட்டை சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

முட்டை - 2

சீரகம் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகுத்தூள் - சிறிதளவு

எண்ணெய் 

கொத்தமல்லி 

உப்பு 

செய்முறை:

முதலில் கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைக்கவும். பின்பு கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பிறகு அடுப்பில் வைத்து, வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்பு வெங்காயம் பாதி வதங்கியதும், மிளகுப்பொடி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு மசாலா பச்சை வாசனை போய் முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கிக் கொள்ளவும். பிறகு சிறிதளவு கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

பிறகு பிசைந்த சப்பாத்தி மாவினை, மிகவும் மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் முட்டை மசாலாவை வைத்து கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டி கொள்ளவும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முட்டை சமோசா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Evening snacks tasty egg samosa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->