இனி வீட்டிலேயே செய்யலாம் கலக்கலான ஃபிஷ் பிங்கர்..!
Fish Finger Recipe
கடல் உணவுகளில் மீன் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. வீடுகளில் மீன் குழம்பு, வறுவல் போன்றவை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஆனால், சற்றுவித்யாசமாக கரைகளில் கிடைப்பது போல சூப்பரான பிஸ் பிங்கர் எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையானவை:
வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ
எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)
ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி
முட்டை - மூன்று
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை:
மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கி விரல் அளவிற்கு வெட்டி கொள்ளவும். முட்டையை அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் பிரட்டி ஊறவைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதுகாய்ந்ததும் முட்டையில் மீனை தோய்த்து ரொட்டித்தூளில் புரட்டி எண்ணெயில் பொறித்தெடுத்தால் சுவையான பீஷ் பிங்கர் தயார்.