ரெடிமேட் சட்னி செய்வது எப்படி? இதோ உங்களுக்காக.!
how to make chutny powder
தற்போதைய காலத்திற்கேற்ப அனைத்து செயல்களும் நவீனமாகிவுள்ளது. நேரத்தை குறைக்கும் விதமாக அனைத்தும் ரெடிமேட் ஆக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்னியை பொடி செய்து வைத்து எப்படி பயன்படுத்தலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
வேர்க்கடலை
பொட்டுக்கடலை
முழு வெள்ளை உளுந்து
வர மிளகாய்
உப்பு
தேங்காய் துருவல்
கறிவேப்பிலை
பூண்டு
பெருங்காயத்தூள்
செய்முறை:-
லிஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதில் கடலையை மட்டும் வறுத்துவிட்டு, தோலை நீக்கிவிட வேண்டும். அதேபோல், தேங்காயின் ஈரம் போகும் வரை வறுக்க வேண்டும்.
அனைத்தையும் வறுத்து சூடாக இருக்கும்போது இறுதியாக பெருங்காய்த்தூளை சேர்த்து கலந்துவிடவேண்டும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக ஆறவிடவேண்டும்.
இவையனைத்தும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக இடித்துக்கொள்ள வேண்டும். பொடி தயாரானவுடன் அதையும் நன்றாக ஆறவைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை தேவைப்படும் பொது தண்ணீரில் கலந்து தாளித்து பயன்படுத்த வேண்டும்.
English Summary
how to make chutny powder