சோள ரவை உப்புமா செய்வது எப்படி - வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


சோள ரவை உப்புமா செய்வது எப்படி - வாங்க பார்க்கலாம்.!

தானிய வகைகளில் ஒன்று சோளம். இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவைகள் இருக்கின்றன.

இந்த சோளத்தில் உள்ள அதிகப்படியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலுவாதுடன் தேய்மானத்தையும் சரிசெய்கிறது. இப்படிப்பட்ட இந்த சோளத்தை வைத்து ரவை உப்புமா செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருள்: சோளம், அரிசி ரவை, கோதுமை ரவை, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், தேங்காய் எண்ணெய், உப்பு.

செய்முறை: 

முதலில் சோளத்தை ரவையாக உடைக்கவும். பின்னர் அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். 

நன்கு வதங்கிய பின்னர் ரவைக்கு ஏத்து போல் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொத்தி வந்தவுடன் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சோள ரவை உப்புமா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make corn rava upma


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->