புதிய டேஸ்டில் முட்டை குழம்பு செய்வது எப்படி?
how to make egg kuzhambu
புதிய டேஸ்டில் முட்டை குழம்பு செய்வது எப்படி?
ஒரே சுவையில் முட்டைக்கு குழம்பு சாப்பிட்டு வெறுப்பாகி உள்ளவர்களுக்கு புதிய சுவையில் முட்டைக் குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை, பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, தனியா, சீரகம், வரமிளகாய்
மஞ்சள் தூள், புளி, தேங்காய், எண்ணெய், மல்லித்தழை, உப்பு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, தனியா, சீரகம், வரமிளகாய் உள்ளிட்டவற்றை மணக்க வறுத்து, நன்கு ஆறவிடவும். இதற்கிடையே அவித்த முட்டையை லேசாக நான்கு பக்கம் கீறி ஒரு தவாவில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் போட்டு சில
நிமிடங்கள் பிரட்டி வறுத்து எடுத்து வைக்கவும்.
இதையடுத்து, வறுத்த கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு நீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதனை முட்டையை வறுத்த அதே தவாவில் போட்டு அளவான நீர் விட்டு நன்கு கலந்துவிடவும். இந்தக் குழம்பு கொதித்து வர வறுத்த முட்டையை இதில் போட்டு நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமாக வைத்து வாணலியை மூடி போட்டு மூடி விடவும்.
சில நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து வந்த நிலையில் தேவையான உப்பு சேர்த்து கிளறி இதன் மேல் மல்லித் தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான முட்டைக் குழம்பு தயார்.