ஐந்து நிமிடத்தில் அசத்தலான முட்டை குழம்பு - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


தினமும் காலையில் எழுந்து என்ன சமைப்பது என்று இல்லத்தரசிகள் குழப்பத்திலேயே இருக்கின்றனர். அதனால், ஐந்து நிமிடத்தில் முட்டை குழம்பு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

முட்டை, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் , எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மசாலாத்தூள், கொத்தமல்லி, கரம் மசாலா.

செய்முறை:-

முதலில் வெங்காயம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்து வந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க விட வேண்டும். 

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின்பு அதில் ஐந்து முட்டைகளையும் உடைத்து ஊற்றி தீயை குறைத்து முட்டையை வேக விடவும். முட்டை வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make egg kuzhambu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->