இளநீரில் அல்வா வா? இது என்ன புதுசா?
how to make ilaneer halwa
உடல் சூட்டை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இதை வைத்து சிலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் உள்ளிட்டவற்றை செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் இந்த இளநீரை அல்வா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
இளநீர்
கார்ன்பிளார் மாவு
சர்க்கரை
ஏலக்காய் தூள்
முந்திரி, பாதாம்
![](https://img.seithipunal.com/media/ilaneer halwa-xl9s4.png)
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே வாணலில் சிறிதளவு நெய் ஊற்றி ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
இதைத் தொடர்ந்து, இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இந்த அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.
English Summary
how to make ilaneer halwa