கோவைக்காயை வைத்து கிரேவியா? - வாங்க பார்க்கலாம்.!
how to make kovaikay gravy
கோவைக்காயை வைத்து கிரேவியா? - வாங்க பார்க்கலாம்.!
காய்கறி வகைகளில் ஒன்று கோவைக்காய். உடலுக்கு மிகவும் நன்மையைத் தரும் கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கோவைக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :-
கோவக்காய், நிலக்கடலை, தேங்காய், கசகசா, மிளகு, சீரகம், மல்லி, முந்திரி பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, புளி, வெங்காயம்
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில், ஒரு கடாயை வைத்து நிலக்கடலை, தேங்காய், கசகசா, மிளகு, சீரகம், மல்லி, முந்திரி பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, உள்ளிட்ட பொருட்களை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். இதனை ஆற விட்டு மிக்ஸியில் போட்டு கெட்டியான புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சூடான வாணலில் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணெய்யில் இரண்டு பிரியாணி இலை சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
இந்தக் கலவையில், வதக்கி வைத்த கோவைக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்தவுடன் லேசாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் போதும் சுவையான கோவைக்காய் கிரேவி தயார்.
English Summary
how to make kovaikay gravy