வெண்டைக்காயில் துவையலா எப்படி செய்வது? - வாங்க பார்ப்போம்
how to make ladis finger thuvaiyal
காய்கறி வகைகளில் ஒன்று வெண்டைக்காய். இந்த வெண்டைக்காயை வைத்து பொரியல் புளிக்குழம்பு சாம்பார் என்று செய்வார்கள்.
இது சிலருக்கு பிடிக்காமல் போகும். அப்படி உள்ளவர்களை வெண்டைக்காயை சாப்பிட வைப்பதற்கு ஈஸியான துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய், நிலக்கடலை, பூண்டு, எண்ணெய், வெந்தயம், கடுகு, சீரகம், மல்லி, வத்தல், கறிவேப்பிலை
செய்முறை.
முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆறவிட வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் கடுகு சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
இதனுடன் மல்லி விதைகளை சேர்த்து சிவந்து வரும் வரை மறக்க வேண்டும் அதன் பின்னர் காரத்திற்கு தேவையான அளவு மிளகாய் வத்தலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைத்தொடர்ந்து வறுத்து வைத்துள்ள அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் தக்காளி மற்றும் புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஏற்கனவே போடி கொரகொரப்பாக அரைத்துள்ள பொடியை கலந்து கொள்ள வேண்டும்
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுத்தம் பருப்பு, வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து கலந்து கொட்டினால் வெண்டைக்காய் துவையல் ரெடி.
English Summary
how to make ladis finger thuvaiyal