சுவையான செட்டிநாடு காளான் தொக்கு..!!
how to make mushroom thokku
இந்தக் காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக காளானும் உள்ளது. இந்தக் காளானை வைத்து காளான் மசாலா, கிரேவி, காளான் 65, காளான் மஞ்சூரியன் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில் இன்று நாம் சுவையான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான்
பெரிய வெங்காயம்
தக்காளி
உப்பு
தனியா
மிளகு
சீரகம்
பெருஞ்சீரகம்
காய்ந்த மிளகாய்
பூண்டு
எண்ணெய்
பட்டை
லவங்கம்
செய்முறை:
முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர். தனியா, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு உள்ளிட்ட பொருட்களை வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இதையடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும். இதில், வறுத்து அரைத்த கலவையைப்போட்டு வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி.
English Summary
how to make mushroom thokku