பன்னீரில் ப்ரை ரைஸா? - வாங்க பார்க்கலாம்.!!
How to make paneer fry rice
பன்னீரில் ப்ரை ரைஸா? - வாங்க பார்க்கலாம்.!!
உணவு வகைகளில் ஒன்றான பன்னீர் கேன்சரை எதிர்த்து போராட உதவுகிறது. பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. எடை குறைப்பு மற்றும் செரிமான உறுப்புகள் செயல்பட உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. இப்படி பல நன்மைகளைக் கொண்டுள்ள பன்னீரை வைத்து முதல் முறையாக பன்னீரை வைத்து ப்ரை ரைஸ் செய்வதை பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:-
பன்னீர், பாஸ்மதி அரிசி, தக்காளி, வெங்காயம், பூண்டு, முட்டைகோஸ், எண்ணெய், மிளகாய் பொடி, உப்பு, மிளகு, மல்லித்தழை, சோயா சாஸ்
செய்முறை :-
முதலில் காய்கறிகள் மற்றும் பன்னீரையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் தேவையான எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் பூண்டை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து தக்காளி மற்றும் முட்டைகோஸ் சேர்த்து நன்றாக வதக்கி அனைத்தும் வெந்தவுடன், சிறிது சோயா சாஸ் மற்றும் மசாலாக்கள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் வேகவைத்த சாதம், பன்னீர் சேர்த்து நன்றாக கலக்கி, அதிக தீயில் ஐந்து நிமிடம் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். இதனுடன் கொத்தமல்லித்தழை, தேவைப்பாட்டால் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கினால் சுடசுட, சுவையான மணக்கும் பன்னீர் ஃப்ரைட் ரைஸ் தயார்.
English Summary
How to make paneer fry rice