சுவையான பைனாப்பிள் கேசரி! செய்வது எப்படி.?
How to make pineapple kesari
சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் -1/2 கப்
ரவை- 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி பருப்பு
உலர் திராட்சை
ஏலக்காய் தூள்
கேசரிப் பவுடர்
நெய்
செய்முறை:
பைனாப்பிளின் தோலை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்பு நறுக்கி வைத்துள்ள பைனாப்பிள்ளில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு தவாய் வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே தவாயில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சூடானதும் அதில் தேவையான அளவு கேசரி பவுடர் சேர்க்கவும்.பிறகு தண்ணீர் கொதித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ரவை சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். ரவை கொஞ்சம் வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
அடுத்து சர்க்கரையை சேர்த்து ஊற வைத்திருக்கும் பைனாப்பிள் மற்றும் ஏலக்காய் பொடி அதில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு கேசரி கெட்டியானதும் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்தால் சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி.
English Summary
How to make pineapple kesari