என்னது சுண்டைக்காயில் சட்னியா? - வாங்க பார்க்கலாம்.!
how to make sundaikai chutny
என்னது சுண்டைக்காயில் சட்னியா? - வாங்க பார்க்கலாம்.!
காய்கறி வகைகளுள் ஒன்றான சுண்டைக்காய் உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இது நரம்பு மண்டலத்துக்கு அதிக சக்தியை தருகிறது. இப்படி பல மருத்துவ குணங்களைக் கொண்ட சுண்டைக்காயை வைத்து ஒரு புது சுவையில் சட்னி செய்து குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:-
சுண்டைக்காய், தேங்காய், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, வெள்ளப்பூண்டு, புளி சிறிதளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய் வத்தல், கடலை எண்ணெய், உப்பு, கடுகு உளுந்து, பெருங்காயம்

செய்முறை:-
சுண்டைக்காயை நசுக்கி லேசாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலில் எண்ணெய் விட்டு கடலைபருப்பு உளுத்தம் பருப்பு, சீரகம்,கடுகு, மிளகு, மிளகாய் வத்தல் உள்ளிட்டவற்றை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அலசி வைத்துள்ள சுண்டைக்காயை நன்றாக வதக்கி அதனுடன் தேங்காயை சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். இவற்றில் வெள்ளப்பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, புளி சேர்த்து வதக்கி ஆறவிட வேண்டும்.
இதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி லேசாக தண்ணீர் கலந்த கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு, பெருங்காயம் கருவேப்பிலை கலந்து தாளித்து அரைத்த விழுதில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான அரைத்து சுண்டக்காய் சட்னி ரெடி .
English Summary
how to make sundaikai chutny