டேஸ்டியான கத்திரிக்காய் சாதம்.! செய்வது எப்படி.?
How to make tasty Brinjal rice
டேஸ்டியான கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
கத்திரிக்காய் - 5
வெங்காயம் - 3
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். பிறகு வெங்காயத்தையும், கத்திரிக்காயையும் நறுக்கிக் கொள்ளவும். பின்பு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி பிறகு கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்த பொடியை தூவி 2 நிமிடம் கிளறவும். பிறகு, ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி, மல்லித்தழை தூவி இறக்கினால் டேஸ்டியான கத்திரிக்காய் சாதம் ரெடி.
English Summary
How to make tasty Brinjal rice