நாவில் எச்சில் ஊரும் ரவை இனிப்பு பொங்கல்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


தித்திப்பான சுவை நிறைந்த ரவை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்

வெல்லம் - 1/2 கப்

நெய் - தேவையான அளவு

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 8

காய்ந்த திராட்சை - 7

ஏலக்காய் - 3

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து ரவைவை நன்றாக வறுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை, பாசிப்பருப்பு கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

பின்பு வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும். பிறகு வடிகட்டி வைத்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்க்கவும். பின்பு நன்றாக கிளறி ஏலக்காய் சேர்க்கவும். இதையடுத்து பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்தால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty rava sweet pongal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->