மணமணக்கும் தக்காளி குழம்பு - எப்படி செய்வது?
how to make tomatto kulambu
இட்லி, தோசைக்கு தினமும் சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவதால் சிலருக்கு அதன் மீது வெறுப்பு அதிகமாகும். அப்படி உள்ளவர்களுக்கு புதிய சுவையில், தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
சின்ன வெங்காயம்
தக்காளி
பூண்டு
இஞ்சி
கசகசா
பட்டை
சோம்பு
கறிவேப்பிலை
எண்ணெய்
மிளகாய்த்தூள்
மஞ்சள்தூள்
கரம்மசாலா
மல்லித்தூள்
தேங்காய் துருவல்
உப்பு
கொத்தமல்லி
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு போட்டு பொரிய விட்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி, பூண்டு, தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இதனுடன், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம்மசாலா உள்ளிட்டவற்றை கலந்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பின்னர், மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதை கொட்டி தண்ணீர், உப்பு கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குழம்பு தயார்.
English Summary
how to make tomatto kulambu