மணமணக்கும் கத்தரிக்காய் மொச்சை பொரியல் - எப்படி செய்வது?
how to prepare katharikai mochai poriyal
கத்தரிக்காய் மொச்சை பொரியல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பிஞ்சுக் கத்திரிக்காய், பச்சை மொச்சை, நாட்டுப் பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித்தழை, சோம்பு , சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி, நல்லெண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு.
செய்முறை:- முதலில் கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு பச்சை மொச்சையை வேகவைக்கவும். வாணலில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இதையடுத்து நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும். பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை கலவையில் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் மொச்சை பொரியல் தயார்.
English Summary
how to prepare katharikai mochai poriyal