ஜவ்வரிசியில் தோசை செய்து இருக்கிறீர்களா? சூப்பரான மொறு மொறு தோசை..!
Javvarisi Dosa Recipe
மாவு தோசை, ரவா தோசை, கம்பு தோசை என பல வகை தோசைகள் செய்யுவோம். அதே போல சுவையான ஜவ்வரிசியில் சுவையான தோசை செய்து கொடுக்கலாம்.
தேவையானவை :
புழுங்கலரிசி - ஒன்றரை கப்
ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
ஜவ்வரிசியை தயிரில் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஊறவைத்த அரிசி, ஜவ்வரிசியை தனிதனியே ஆட்டி கொள்ளுங்கள்.வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மாவை கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து அது காய்ந்ததும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.