இரும்பு சத்து அதிகம் நிறைந்த பேரீச்சம் பழம்.. வித்யாசமான பர்பி கொடுத்து அசத்துங்கள்..!
perissam oazham laddu
பேரீச்சம் பழத்தில் உடலுக்கு தேவையான உடலுக்கு இரும்பு சத்தை அளிக்கிறது. சர்கரை நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் உதவிகரமாக உள்ளது. இதில், சூப்பரான பர்பி எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.
தேவையான பொருள்கள்:
பேரிச்சம்பழம் - 10
பால் - 1/2 லிட்டர்
நெய் - 3 ஸ்பூன்
பால் பவுடர் - 3/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
பிஸ்தா - தேவையான அளவு
செய்முறை :
பேரீச்சம்பழம் மற்றும் பாலை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி அது காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கிளறி கொள்ளவும். அதனுடன் பால் பவுடர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கிளறிய பின்னர் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும்.
நெய்யை தட்டில் தடவி கொள்ளவும் இந்த கலவையை கொட்டி கொள்ளவும். அதன் பின், அதனை வில்லைகளாக நறுக்கிகொள்ளவும்.