சத்தான, சுவையான ராகி மால்ட் செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்
கேழ்வரகு மாவு - 5 டேபிள் ஸ்பூன்
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :

வாணலியில் கேழ்வரகு மாவை போட்டு சுமார் 5 நிமிடம் நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ராகி மாவை 1/2 கப் பாலில் சேர்த்து நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதன்பின்னர் மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அந்த பால் கொதிக்க ஆரம்பித்தவுடன், கேழ்வரகு கலவையை சேர்த்து நன்றாக கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி கொள்ளவும்.

பின்னர் அத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக பச்சை வாசனை போகுமளவு கிளறி கொள்ள வேண்டும். அத்துடன், ஏலக்காய் பொடி, கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும்.

சத்தான, சுவையான ராகி மால்ட் தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raaghi malt preparation in tamil


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->