பீட்ரூட் பரோட்டா செய்வது எப்படி? - வாங்க பார்க்கலாம்.!! - Seithipunal
Seithipunal


பீட்ரூட் பரோட்டா செய்வது எப்படி? - வாங்க பார்க்கலாம்.!!

காய்கறி வகைகளுள் ஒன்று பீட்ரூட். இது உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக பெண்கள் பீட்ரூட்டை பொரியல் மற்றும் சாம்பாரில் போட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால், இந்த பீட்ரூட்டை வைத்து பரோட்டா செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்-

பீட்ரூட் - 2

கோதுமை மாவு - 2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

ஓமம் - 1 டீஸ்பூன்

கொத்துமல்லி இலை - சிறிதளவு

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை-

முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி வைத்துவிட்டு, பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி துருவிய பீட்ரூட் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து  வதக்கிக் கொள்ளவும். இதையடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், ஓமம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையுடன் வதக்கிய பீட்ரூட், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் உள்ளிட்டவற்றை சேர்த்து கலக்க வேண்டும். அதில், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுமார் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பிறகு சப்பாத்தியாகவோ அல்லது பரோட்டாவாகவோ செய்து சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of beetroot parotta


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->