காலையில் செய்த சப்பாத்தி மீதம் இருக்கா? அப்போ சூப்பரான ரெசிபி..!
Sapathi Upma
சிலர் இரவு உணவாக சப்பாத்தி செய்திருப்போம். அவை மீந்து போனால் என்ன செய்வது என தெரியவில்லையா அப்போ அந்த சப்பாத்தியை வைத்து சூப்பரான உப்புமா எப்படி செய்வது என பார்போம்.
தேவையனவை :
சப்பாத்தி - 5
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 2
உப்பு, ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொப்பு
சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
பட்டாணி - 1
செய்முறை :
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை துண்டுகளாக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பட்டாணி மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடிவைத்து இறக்கி பரிமாறவும்.