நாவூறும் இறால் தொக்கு சூப்பரா, சுவையா செஞ்சி சாப்பிடுங்க.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

இறால் - 250 கிராம் 
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1 1/2   டீஸ்பூன் 
மஞ்சள் தூள்  - 1/4 டீ ஸ்பூன் 
சோம்பு  - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள்  - 1  டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை   - சிறிதளவு 
பச்சை மிளகாய்    - 2 
கொத்தமல்லி புதினா  - சிறிதளவு 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம் தக்காளி மற்றும் கறிவேப்பிலை பச்சை மிளகாய்  ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

அடுப்பில் வாணலியை வைத்து  நன்றாக சூடாகியதும் அதில் மூன்று டேபிள் ஸ்பூன்  எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு சேர்த்து  வதக்கவும். சோம்பு நன்றாக பொரிந்த வாசம் வந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும். 

பெரிய வெங்காயம் நன்றாக வதங்கி   பொன்னிறத்தில்  வந்ததும், அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது  மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அவற்றின் பச்சை மணம் நீங்கியவுடன்  கறிவேப்பிலை மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்ததும்  தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி  கொதிக்க விடவும்.

மசாலா நன்றாக கொதித்து வரும்போது  சுத்தம் செய்து வைத்த இறாலை அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரம் அப்படியே கொதிக்க விட்டு இறால் நன்றாக வெந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம்  கொதிக்க விட்டு  பின்னர் நறுக்கி வைத்த கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து   நன்றாக கிளறிய பின்  அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சுவையான இறால் தொக்கு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spicy iraal thokku receipe for your weekend cooking 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->