டேஸ்டியான ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் கஸ்டர்ட்.! செய்வது எப்படி.?
Tasty Fruits and nuts custard
டேஸ்டியான ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் கஸ்டர்ட் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
நட்ஸ் - தேவைக்கேற்ப
பழக்கலவை - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு கப் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். பிறகு மீதமுள்ள பாலில் கஸ்டர்ட் பவுடர், சர்க்கரையை கரைக்கவும். பின்பு அடுப்பில் வைத்த பால் பொங்கி வரும்போது, கஸ்டர்ட் பவுடர் கரைசலை அதில் ஊற்றி, குறைந்த தீயில் கிளறவும். பிறகு பால் கெட்டியானதும் இறக்கவும்.
பிறகு பழக்கலவை மற்றும் நட்ஸ் சேர்த்து, பிரிட்ஜில் 3 மணி நேரம் குளிர வைத்து பரிமாறவும்.
English Summary
Tasty Fruits and nuts custard