சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்ய வேண்டும்? - டிப்ஸ் இதோ..!
tips of make chappati
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சப்பாத்தி. அதிலும் குழந்தைகளுக்கு சப்பாத்தி இருந்தால் போதும், ஸ்னாக்ஸ் கூட தேவையில்லை. அப்படிப்பட்ட இந்த சப்பாத்தியை செய்யும்போது அது மிருதுவாகவும், சுவை கூடுதலாகவும் இருப்பதற்கு சில குறிப்புகளை இங்குக் காணலாம்.
அதாவது, எண்ணெய் மற்றும் நெய் கலந்து சப்பாத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தால், எண்ணெய் அரை கப், நெய் ஒரு டேபிள் ஸ்பூன் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவு சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
இதேபோல், சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது, அதனுடன் இரண்டு கைப்பிடியளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும். சுவையும் வித்யாசமாக இருக்கும்.