கோடைகாலத்தில் சன்ஸ்க்லரீன் ஏன் முக்கியம்? - Seithipunal
Seithipunal


சன்ஸ்க்ரீன் ஏன் முக்கியம் தெரியுமா?


பொதுவாக சூரிய ஒளியில் இருந்து தான் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகமாகக் கிடைக்கிறது என்பது நமக்குத் தெரியும். இப்படி நன்மை இருக்கும் போது, நாம் சன்ஸ்க்ரீன் போடுவதால் சூரியனிடமிருந்து கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு சரியாகக் கிடைப்பதில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. காலை நேரத்தில், மாலைப்பொழுதில் தான் சூரியக் கதிர்களில் இருந்து நமக்குத் தேவையான வைட்டமின்களைப் பெற முடியுமே தவிர, உச்சி வெயிலில் சூரியக்கதிர்களின் மூலம் சருமத்தில் பாதிப்புகள் தான் ஏற்படும். இந்த பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுக்காக்க நாம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

சருமப் புற்றுநோயை தடுக்கும் சன்ஸ்கிரீன்:


சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனின் புற ஊதா கதிர்களின் கதிர்களில் இருந்து காப்பதுடன், அதனால் சருமத்தில் ஏற்படும் கருமை, கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷனில் இருந்து காக்க உதவும். மேலும், சருமத்தை வறட்சியில் இருந்து மீட்டு சரும ஈரப்பதத்தை தக்க வைக்கவும், முன்கூட்டிய வயது முதிர்வை தவிர்க்கவும், சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. 

தேர்ந்தெடுப்பது எப்படி?
1 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் எஸ்.பி.எப் 50 உடன், 100 சதவீதம் மினரல் உள்ள சன்ஸ்கிரீனும், 6 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் சாதாரண எஸ்.பி.எப் 50 சன்ஸ்கிரீனும், 16 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் ஈரப்பதத்தை அதிகரிக்கும் அன்சீன் எஸ்.பி.எப் 40 சன்ஸ்கிரீனும், 25 முதல் 35 வயது உள்ளவர்கள் ஜிங்க் கலந்த, 100 சதவீதம் மினரல் உள்ள எஸ்.பி.எப் 40 சன் ஸ்கிரீனும், 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கலர் கரெக்ட்டிங் எனப்படும் சிசி எஸ்.பி.எப் 35 சன்ஸ்கிரீனும், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் எஸ்.பி.எப் 30-ல் சீரம் வகை சன்ஸ்கிரீன் மற்றும் எஸ்.பி.எப் 40-ல் பட்டர் வகை சன்ஸ்கிரீனும், 60 வயதை கடந்தவர்கள் மாய்ஸ்சுரைஸ் வகையில் எஸ்.பி.எப் 40 வகை சன்ஸ்கிரீனும் பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is sunscreen important in summer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->