இந்த பயங்கரவாதத்தை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து எதிர்க்க வேண்டும்...! - அசாம் முதல்வர்
Hindus and Muslims should unite to oppose this terrorism Assam Chief Minister
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 'இந்துக்கள், முஸ்லிம்கள் ,இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம் பொன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
ஹிமாந்தா பிஸ்வா சர்மா:
மேலும், ஹோஜாய் என்ற பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பேரணியில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்ததாவது,"பயங்கரவாதிகள் இதற்கு முன்னதாக ஒருபோதும் தாக்குதல் நடத்தப்பட்டபோது மத அடையாளத்தை கேட்டதில்லை.
ஆனால், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் பாதுகாப்பாக இருப்போம். பாஜக அரசின் கீழ் அனைத்து மத மக்களும் பாதுகாப்பாக உள்ளனர். இந்துக்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிட வேண்டும்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பொன்ற நாடுகளை தண்டிக்க வேண்டும்.அசாமில் வாழும் சிலர் மறைமுகமாக பாகிஸ்தானை ஆதரிக்கின்றனர்.
அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்றாலும், தப்பிவிடமாட்டார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் 15 நாட்களாக பாகிஸ்தானில் தங்கியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Hindus and Muslims should unite to oppose this terrorism Assam Chief Minister