2024ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம்! ஒருவர் மட்டும் 125 பாஸ்தா - சுவாரசிய சம்பவம்!
2024 biriyani no 1 place
ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் மக்கள் ஆர்வம் குறித்த தகவல்களை உணவு டெலிவரி நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இந்த 2024ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 9வது ஆண்டாக பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் மட்டும் 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு நொடியும் 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஹைதராபாத்தில் 97 லட்சம், பெங்களூருவில் 77 லட்சம், சென்னையில் 46 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன.
இரண்டாவது இடத்தில் தோசை 2.3 கோடி ஆர்டர்களுடன் உள்ளது. குறிப்பாக தென் இந்தியாவில் தோசை, இட்லி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை 18 லட்சம் சிக்கன் பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
ஸ்நாக்ஸ் வகைகளில் சிக்கன் ரோல், சிக்கன் மோமோஸ், உருளைக்கிழங்கு வறுவல் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் 125 பாஸ்தா ஆர்டர்களுக்கு ரூ.49,900 செலவழித்துள்ளார்.