காலை உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய... நாள் முழுவதும் எனர்ஜியைக் கொடுக்கும் '5' உணவுகள் எவை எவை தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நாம் காலையில் சாப்பிடும் உணவு தான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நாம் காலையில் சாப்பிடும் உணவு நமது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். 

காலையில் சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கு காண்போம். 

1. முட்டை : 

அதி சிறந்த புரதத்தை தன்னுள் கொண்டுள்ள முட்டை மிகச் சிறந்த காலை உணவுக்கு சரியான தேர்வாகும். இது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதோடு, உங்கள் வயிறும் நீண்ட நேரம் நிறைந்த உணர்வு இருக்கும். இது மூளை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.


2. பப்பாளி :

காலையில் வெறும் வயிற்றிலேயே பப்பாளியை உண்ணலாம். ஆனால் இதை சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. பப்பாளி வயிற்றை சுத்தப் படுத்துவதோடு, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. 

3. ஓட்ஸ் : 

நார்ச்சத்து நிரம்பிய ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாகும். இது உடலில் உள்ள கொலஸ்டராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஓட்ஸில் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின், துத்தநாகம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. 

4. கிரீன் டீ : 

கிரீன் டீயில் காபின் உள்ளது. இது உங்களை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். நல்ல ஆரோக்கியமான மனநிலையை உங்களுக்கு அளிப்பதோடு, உங்களுக்கு ஏற்படும் மனப் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

5. சியா சீட்ஸ் :

நார்ச்சத்து நிறைந்துள்ள சியா விதைகள் மிகுந்த ஆரோக்கியமானதும் கூட. இது உங்கள் ரத்தசர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 Best Breakfast Foods To Maintain Good Metabolism


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->