டீ டைம் ஸ்நாக்: ஈஸியான உருளைக்கிழங்கு டோநட்! ட்ரை செய்யலாம் வாங்க!
A very easy potato vada receipe
தினமும் டீ மற்றும் காபி குடிக்கும் போது கடைகளில் பலகாரம் வாங்கி சாப்பிட்டு போர் அடிக்கிறதா? அசத்தலான உருளைக்கிழங்கு வடை செஞ்சு பார்க்கலம்!
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு -1 பெரிய அளவு
மைதா ஆள் பர்பஸ் மாவு - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி இலை 1 கைப்பிடி அளவு
பூண்டு - 1 பல் (நறுக்கியது)
பெருஞ்சீரகம் /சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - ஆழமாக வறுக்க
செய்முறை :
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கின் தோலை நீக்கி அதனை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
நன்றாக மசிந்த வேக வைத்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி பூண்டு, பெருஞ்சீரகம், சோம்பு மற்றும் ஆள் பர்பஸ் மைதா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் கரைத்து வைத்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து பொன்னிறமாக வந்ததும் எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு டோநட் ரெடி.
English Summary
A very easy potato vada receipe