இந்தப் பொருட்களை எல்லாம் இந்த கிழமைகளில் மறந்தும் கூட வாங்கிடாதீங்க.. மீறினால் 'துரதிர்ஷ்டம்' துரத்தும்..!!
According to Astrology Dont Buy These Things In These Days
ஜோதிடத்தில் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளும் ஒவ்வொரு கிரகங்களுக்கானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சில நாட்களில் சில பொருட்களை வாங்கக் கூடாது என்று ஜோதிடம் சொல்கிறது. எனவே என்னென்ன கிழமைகளில் என்னென்ன பொருட்களை வாங்கக் கூடாது என்று இங்கு பார்ப்போம்.
திங்கட்கிழமை : சிவ பெருமானுக்கு உகந்த நாளான இன்று, எந்த தானியங்களும் வாங்க கூடாது. அது போலவே கலை சம்பந்தப்பட்ட பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவே கூடாது.
செவ்வாய்க்கிழமை : பால், மரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள், உலோகங்கள், காலணிகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
புதன் கிழமை : வீடு, மனை, அது சம்பந்தமான பத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்கவே கூடாது.
வியாழக் கிழமை : குரு பகவானுக்கு உகந்த நாளான இன்று, எந்த கண்ணாடிப் பொருட்களையும் வாங்குதல் கூடாது. மேலும் பூஜைக்கு தேவையான பொருட்கள், கத்தி போன்ற கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளிக் கிழமை : வெள்ளிக் கிழமையில் கத்தி, கத்திரிக்கோல் உள்ளிட்ட பொருட்கள், இரும்பு பொருட்களை வாங்கவே கூடாது. மேலும் சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்களை வாங்கவோ, அரைக்கவோ கூடாது.
சனிக் கிழமை : சனி பகவானுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் இன்று, உப்பை கண்டிப்பாக வாங்கவே கூடாது. மேலும் எடை அதிகமுள்ள பொருட்கள், வீடு மற்றும் இரும்பு சம்பந்தமான பொருட்களை கண்டிப்பாக வாங்க கூடாது.
ஞாயிற்றுக் கிழமை : ஞாயிற்றுக் கிழமையில் இரும்பு சம்பந்தமான எந்த விதமான பொருட்களையும் வாங்கவே கூடாது.
English Summary
According to Astrology Dont Buy These Things In These Days