கடல் உணவு சாப்பிடுவரா நீங்கள்.. அப்போ கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..! - Seithipunal
Seithipunal


கடல் உணவுகள் தான் புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது, அசைவ பிரியர்களுக்கு கடல் உணவுகள் என்றால் அலாதி பிரியம் தான். அதுவும் கடற்கற்றை, ஆறுகள், டாம்கள் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள மீன், நண்டு, இறால் போன்றவற்றை ருசி பார்க்காமல் நிச்சயம் வரமாட்டார்கள். கடல் உணவுகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் உள்ளன. ஆனால், சிலருக்கு கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கடலில் உனவுகளில் உள்ள நன்மை தீமைகளை பற்றி அறிந்து கொள்ளுவோம்.

நன்மைகள் :

மீன் உட்கொள்ளுதல் டிமென்ஷியா, நுரையீரல் புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்ததில் உள்ள ட்ரைகிளைசரைடுகள் மற்றும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 இதயம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.

அதே போல ஒமேகா 3 சாப்பிட்டு வந்தால்  கண்களுக்கு நல்லது, கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு மற்றும் பார்வை இழப்பை தடுக்க உதவுகிறது. மேலும், சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.

புரதசத்து மீன்களில் அதிக அளவு நிரம்பியுள்ளது. இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மீன் நல்ல மாற்று உணவாக உள்ளது.

தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் கடல் உணவை சாப்பிட்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். அதே போல கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதலை, இரத்தக் கட்டியைத் தவிர்க்கிறது. மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியைக் குறைக்கிறது. 

தீமைகள்:

சிலருக்கு கடல் உணவுகள் அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் படலாம். கடல் தற்போது அதிகம் மாசுப்பட்டுள்ளது. அதனால், கடல் உணவுகளும் சில நேரங்களில் அதீதமாக மாசுப்பட்டிருக்கும் அதனால், அந்த உணவுகளை சாப்பிடும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Advantages and dis advantages of sea foods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->