தீவிரமான எழுத்தாளர்... வரலாற்று அறிஞர் என்று போற்றப்படுபவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதி வரும் தீவிரமான எழுத்தாளர்...

மிக முக்கியமான தமிழ் ஆய்வாளர்...

கட்டுரையாளர் மற்றும் இந்துமதச் சிந்தனையாளர்...

வரலாற்று அறிஞர் என்று போற்றப்படுபவர்...

யார் இவர்? இவர் தான்...

பல படைப்புகளை படைத்த அரவிந்தன் நீலகண்டன்...!!

பிறப்பு : 

1971ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி நாகர்கோவிலில் அரவிந்தன் நீலகண்டன் பிறந்தார். 

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டமும் பெற்றுள்ளார். 

திண்ணை இணைய இதழில் இந்தியவியல் மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து பொது வெளியில் அறிமுகமானார். 

மேலும் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த கல்வியிலாளர்கள் மற்றும் தனிப்பட்ட அறிஞர்கள் பங்குபெறும் 'சிருஷ்டி மதுரை" என்ற அமைப்பில் வழி நடத்துபவர்களுள் ஒருவராக உள்ளார். 

எழுத்துப்பணி :

சிறுகதை, கட்டுரை, சமூக மற்றும் அரசியல் நூல்கள் என பல படைப்புகளை அரவிந்தன் நீலகண்டன் படைத்துள்ளார். 

சமூகவியல், அறிவியல், இந்து மதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர் அரவிந்தன் நீலகண்டன்.

அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

ராஜீவ் மல்கோத்ரா உடன் இணைந்து இவர் எழுதிய உடையும் இந்தியா எனும் நூல் அதிகம் கவனிக்கப்பட்ட படைப்பாகும். 

'ஆழி பெரிது" வேதகாலப் பண்பாடு குறித்து அரவிந்தன் எழுதியுள்ள ஓர் ஆய்வு நூல். இது தமிழ் பேப்பர் என்ற இணைய இதழில் தொடராக வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

கதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதுவதோடு வலம் என்ற மாத இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருபவர் அரவிந்தன் நீலகண்டன்.

'ஸ்வராஜ்யா' மற்றும் 'தமிழ் ஹிந்து' இணையதளங்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் அவற்றின் படைப்புகளில் பங்கெடுப்பவராகவும் அரவிந்தன் நீலகண்டன் உள்ளார்.

அரவிந்தன் நீலகண்டனின் தமிழ் புத்தகங்கள் :

உடையும் இந்தியா.

ஆழி பெரிது : வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்.

இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்து கொள்ள.

நம்பக்கூடாத கடவுள்.

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்.

பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸம்.

இந்துத்துவச் சிறுகதைகள்.

இந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்.

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் இந்துத்துவம்.

மோடியின் குஜராத் : இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravinthan Neelakandan History


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->