வீட்டிலேயே பார்லர் போல் பொலிவான சருமத்தைப் பெற சில எளிமையான டிப்ஸ்.!
beauty parlour tips for face
அனைவருக்கும் அழகான மற்றும் சிறப்பான சருமம் வேண்டும் என்பது விருப்பமாகும். ஆகவே வீட்டில் இருந்து கொண்டே இந்த தீர்வுகளைப் பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம். இந்த எளிய தீர்வுகளைப் பின்பற்றுவதால் பொலிவான சருமம் பெறலாம்.
உங்கள் முகத்தில் சுருக்கம் மற்றும் திட்டுக்கள் இருந்தால் நீங்கள் உங்கள் முகத்திற்கு பாதாம் பயன்படுத்தலாம். பாதாம் பேக் பயன்படுத்தி உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்கலாம். இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில பாதாம்.
பாதாம் துண்டுகளை அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் காயத் தொடங்கும்போது, முகத்தை சூழல் வடிவத்தில் மசாஜ் செய்து பிறகு தண்ணீரால் கழுவவும். முகத்தில் திட்டுக்கள், தழும்புகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.
சரும பராமரிப்பில் ஓட்ஸ் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க, ஓட்ஸ் மற்றும் யோகர்ட் கலந்து தயாரித்த விழுதை பயன்படுத்துங்கள். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, உலர வையுங்கள். முகத்தில் இந்த கலவை முற்றிலும் உலர்ந்த பின்பு பன்னீர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
அடுத்த சில நாட்களில் உங்கள் முகம் மின்னத் தொடங்கும். ஓட்ஸ் ஒரு இயற்கை எக்ஸ்போலின்ட் ஆகும் . இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் போன்றவற்றை போக்கும் தன்மை கொண்டது. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, சூழல் வடிவத்தில் மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெகுவாகக் குறையத் தொடங்குகின்றன.
தேன் மற்றும் பன்னீர் (ரோஸ் வாட்டர்) கலவை உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படும் தேன், சருமத்திற்கு சிறந்த பலனைத் தரும். சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது, பிரகாசமாகிறது மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கிறது. தெளிவான சருமம் பெற தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதால் சருமத்தில் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை குணமாகும். மேலும் இந்த கலவை எல்லாவித சருமத்திற்கும் பொருந்தும்.
English Summary
beauty parlour tips for face