சௌ சௌ காயில் எவ்வளவு நன்மைகள் உள்ளது? - Seithipunal
Seithipunal


நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் பல நன்மைகள் உள்ளன. அந்த வகையில், சௌ சௌவின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* சௌசௌ ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள மைரிசிட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் வீக்கத்துக்கு எதிராக போராடுகிறது. உடலில் கொழுப்பை குறைக்கிறது. இதயத்தை காக்க இந்த காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

* இந்த காயை சாப்பிடும்போது கொழுப்பு கல்லீரல் பிரச்னைகள் குணமாகிறது. உடலின் வளர்சிதையை ஊக்குவித்து கல்லீரலின் கொழுப்பை முறைப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

* இதில் உள்ள நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை அதிகரித்து ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* இது குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு மற்றும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு அன்றாட தேவையில் 40 சதவீத ஃபோலேட் கிடைக்கச் செய்கிறது. உங்கள் அன்றாட ஃபோலோட் தேவையை சௌசௌ பூர்த்தி செய்கிறது.

* சௌ சௌ காயில் உள்ள குயிர்செடின், மைரிசெடின், கெம்ப்ஃபெரோல், மூரின் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்களை எதிர்த்து போராடுகின்றன. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராடச் செய்கிறது.

* இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், உடல் எடைக்கு குறைய வாய்ப்புள்ளது.

* நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of chow chow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->