நன்மைகளை வாரி வழங்கும் கருவாடு - யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
benefits of karuvadu
அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகளில் ஒன்று கருவாடு. இந்தக் கருவாட்டில் 80-85 சதவிகிதம் வரை புரதச்சத்து உள்ளன. கருவாடு மீன்கள் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளன. இவற்றில் பல ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* உலர்ந்த மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உடலில் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகின்றன.
* இந்த மீனில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. அதனால் சளி, இருமல் உள்ளவர்களுக்கு கருவாட்டுக் குழம்பு ரொம்பவே நல்லது.
* பெண்களுக்கு அதிகம் ஏற்படும் நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இது உதவும்.
* வாதம், பித்தம், ரத்த ஓட்டம் போன்ற பிரச்சனைகள் கருவாடு சாப்பிடுவதால் குணமாகும்.
* பாலூட்டும் பெண்கள் பால் சுறா கருவாடு சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
* இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
இப்படி பல்வேறு நோய்களை தீர்க்கும் கருவாடுகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பார்ப்போம்.
இதய நோய், செரிமான பிரச்சனை, சரும பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள் கருவாடு சாப்பிடவே கூடாது. அதிலும் குறிப்பாக இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் கருவாட்டை தொட்டுக் கூட பார்க்கவே கூடாது.