சீரக தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


காலையில் எழுந்தவுடன் அனைவருக்கும் டீ, காபி, குடிப்பதுதான் வழக்கம். இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அப்படி குடிப்பதால் என்ன பயன் என்று இந்த பதிவில் காண்போம். 

சீரகத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் சி உள்ளிட்டவை அடங்கியுள்ளதால் உடல் சீராக செயல்பட உதவுகிறது. தினமும் இந்த சீரகத்தை உணவில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வலுப்பெறும்.

* இந்த சீரகத்தை நன்றாக பொடியாக்கி துணியில் கட்டி தூங்கும் போது, தலையணையின் அடியில் வைத்து படுத்தால் அதன் வாசம் நமக்கு தூக்கத்தை ஏற்படுத்தும். இது நம் உடலில் ஒரு வித ஹார்மோனை சுரக்க வைத்து மனப்பதட்டம், கோவம், அழுகை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.

* சீரகத்தை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கலந்து தலையில் தேய்த்தால் முடி கருகருவென நீளமாக வளரும். மேலும், முடி உதிர்தல், பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள் சீரகத்தை தலையில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வரலாம்.

* இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தீர்க்கும்.

*  சீரகப்பொடி, எலுமிச்சை சாறு, புதினா சாறு, சிறிதளவு உப்பு அனைத்தும் சேர்த்து சுடுதண்ணீர் கலந்து குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி சீராக செயல்பட உதவும்.

* சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் மூளை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும், உடல் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலுடனும் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of seeraka water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->