புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சி அல்ல, இரட்டை ஹிட்லர் ஆட்சி..அதிமுக கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மக்கள் விரும்பாத பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை எந்த வழியிலாவது நுழைத்துவிட வேண்டும் என என்ஆர்.காங்கிஸ், பாஜக  கூட்டணி அரசு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது என புதுச்சேரி மாநில அதிமுக  துணை செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக  துணை செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் :புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் நாள்தோறும் மக்கள் சொல்லவொண்ணா துயரங்களை சந்தித்து  வருகின்றனர். நிர்வாக திறமையற்ற, தோல்வியடைந்த இந்த கூட்டணி அரசு இரட்டை வேடம் பூண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றி  வருகிறது.

வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக ஒரு புறம் மக்கள் விரோத முதலமைச்சர் தம்பட்டம் அடிக்கிறார். மறுபுறம் மின்  கட்டணம் உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு என மக்களை வாட்டி வதைத்து வருகிறார். அனைத்து குடும்பத்துக்கும் புயல் நிவாரணம் ரூ.5 ஆ யிரம் வீதம் ரூ.177 கோடியை கொடுத்துவிட்டு, இரட்டை ஹிட்லர் ஆட்சியினர், பெட்ரோல், டீசல் கட்டண உயர்வை திணித்து, பல நூறு கோடி ரூபாயை மக்களின் வயிற்றில் அடித்து பிடுங்குகின்றனர். 

 

புதுச்சேரி மக்கள் விரும்பாத பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை எந்த வழியிலாவது நுழைத்துவிட வேண்டும் என என்ஆர்.காங்கிஸ், பாஜக  கூட்டணி அரசு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. மக்களுக்காக பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை கடந்த காலங்களில் மிக கடுமையாக எதிர்த்தோம். அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது கபட நாடகம் போட்டு, போஸ்ட் பெய்டு மின் மீட்டர் திட்டம் என்ற பெயரில் அதே திட்டத்தை வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு புதுச்சேரி மக்களிடம் திணிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. 

ஏற்கனவே தனியாருக்கு மின்துறையை வழங்க முடிவு செய்துவிட்டனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனியாருடன் கூட்டு கொள்ளை அடிக்க புதுச்சேரி மக்களின் வரிப்பணம் ரூ.383 கோடியை தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தொடக்கத்தில், போஸ்டு பெய்டு திட்டம் என கொண்டுவந்து பின்னர் பிரீபெய்டு என மாற்றம் செய்ய ஆளும் மக்கள் விரோத முதலமைச்சர் தலைமையிலான இரட்டை ஹிட்லர் ஆட்சி முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதுஎன புதுச்சேரி மாநில அதிமுக  துணை செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Not a double engine regime in Puducherry but a double Hitler rule AIADMK s attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->