எச்.எம்.பி.வி. தொற்று..இந்தியாவில் பாதிப்பு 7 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


உலக அளவில் எச்.எம்.பி.வி. தொற்று ஏற்கனவே பரவிவரும் நிலையில் மராட்டியத்தின் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று உலக அளவில்  ஏற்கனவே பரவி காணப்படுகிறது. இந்த தொற்றானது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் சுவாச பாதிப்புகளை கண்காணிக்கும் முயற்சியில் ஐ.சி.எம்.ஆர். ஈடுபட்டு வருகிறது. இதில், இந்தியாவில் தொற்று பாதிப்பு எதுவும் அதிகரித்து காணப்படவில்லை என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்தது.இதையடுத்து  பேப்டிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, கடந்த 3-ந்தேதி 8 மாத ஆண் குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை குணமடைந்து வருகிறது.

இதேபோன்று, குஜராத்தில் ஆமதாபாத் நகரில் உள்ள 2 மாத ஆண் குழந்தைக்கும், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதியானது.இந்நிலையில், மராட்டியத்தின் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

நாக்பூர் நகரில் ராம்தாஸ்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தைகளை பெற்றோர் சேர்த்தனர்.அப்போது பரிசோதனை செய்த பின்னர் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதியாகி உள்ளது.இதனை தொடர்ந்து, தொற்று எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில், மராட்டியத்தில் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.இதுபற்றி விரைவில் வழிகாட்டு நடைமுறைகளையும் வெளியிட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HMPV infection Cases in India rise to 7


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->