முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கும்?
benefits of Sprouted venthayam
வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் முக்கிய மூலப் பொருளாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வெந்தயத்தை முளைக்க வைத்து சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
* மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள், முளைத்த வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் வலி குறைகிறது.
* மாதவிடாய் நின்ற பெண்கள் வெந்தயத்தை சாப்பிடுவதால் ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்கும்.
* ஆண்கள் வெந்தயத்தை சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்
* தினமும் முளைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
* முளைத்த வெந்தய விதைகளை சாப்பிடுவது பசியை கட்டுக்குள் வைத்திருக்கும். வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
English Summary
benefits of Sprouted venthayam