விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மைகளா? இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


மக்கள் தங்களுக்கு பிடித்தமான கடவுளுக்கு வாரம் அல்லது மாதத்தில் ஒரு நாள் என்று விரதம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி விரதம் இருப்பது நமது மனதுக்கு அமைதியை தருவதுடன் உடலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது.

அதாவது, விரதம் இருப்பதால், உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குகிறது. இதன் மூலமாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. 

* நமது உடலில் கலோரி குறைபாடு ஏற்பட்டு, அதனால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடல் எடை குறைகிறது. மேலும், உடலில் சேமிக்கப்பட்டு இருந்த கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது.

* பல நபர்களுக்கு விரதம் இருப்பது மன தெளிவை அளிக்கும். செல்களில் உள்ள சேதமடைந்த கூறுகள் அகற்றப்பட்டு அவை புதுப்பிக்க உதவும் ஆட்டோபேஜி என்ற செயல்முறையை விரதம் தூண்டுகிறது. 

* இதனால், உங்களுடைய ஆயுள் அதிகரித்து நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. விரதம் இருப்பதால் நமது உடலில் வீக்கம் குறைகிறது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்கிறது. 

* ஏனென்றால், பல நோய்கள் வீக்கம் காரணமாகவே ஏற்படுகின்றன. விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்த அழுத்தம் குறைந்து, கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளும் குறைகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of take viratham


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->