கிராம்பு எண்ணெயில் கொட்டி கிடக்கும் நன்மைகள்... இதற்கெல்லாம் பயன்படுத்தலாம்..!
Benifits Of Kirambu oil
தற்போதுள்ள உலகில் அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் உதவும் பொருட்கள் குறைந்த அளவே உள்ளன. அப்படி ஒரு பொருள் நம் வீட்டின் சமையலறையில் இருக்கிறது. ஆம், கிராம்பு எண்ணெய் பல வழிகளில் நமக்கு பலனுள்ளதாக இருக்கிறது.
முகப்பரு நீக்க: அதிக அளவு முகப்பரு இருந்தால் கிராம்பு எண்ணெயுடன், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்து வர முகப்பரு நீங்கும்.
மன அழுத்தம் நீங்க: கிராம்பு எண்ணெய் அற்புதமான் நறுமணம் கொண்டிருக்கும். இது நரம்புகளுக்கு புத்துணர்வு அளிக்கும் அதனால் மனம் அமைதி பெறும்.
தலைவலி நீங்க: கிராம்பு எண்ணெயை தடவி வர தலைவலி நீங்கும்.
பல்வலிக்கு: வலி உள்ள இடங்களில் கிராம்பு எண்ணெய் வைத்து சிறிது நேரம் கழித்து உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும்.