5 ரூபாய் பூஸ்ட் பாக்கெட்டில் சூப்பரான பர்ஃபி.! ஈசியா செய்யலாம் வாங்க.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பூஸ்ட் - 1 (5 ருபாய் பாக்கெட்)  
பொட்டுக்கடலை - 1 கப்    
சர்க்கரை - 1  கப் 
ஏலக்காய் - 2 
நெய் - 3 /4  கப் 

செய்முறை :

ஈரப்பதம் இல்லாத ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடியாக்கி எடுத்துக் சலித்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உள்புறம் சுற்றிலுமாக நெய் தடவி வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் சலித்து வைத்த மாவு பூஸ்ட் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். 

அடுப்பில் நான் ஸ்டிக் கடாய் அல்லது அடிகனமான பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி சூடாகியதும் கலந்து வைத்த மாவை சேர்த்து கை விடாமல் நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

மாவு நன்றாக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டு நெய்தடவி வைத்திருந்த பாத்திரத்தில் சேர்த்து ஆறினதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டு சுவைக்கலாம். வாயில் வைத்ததும் கரையும் பூஸ்ட் பர்பி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boost Burfie recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->